கடவுளை அறியாத உலகம் கண்டேன்.
ஆச்சரியம், வித்தியாசங்கள் நிறைய இல்லை.
கலகங்கள் இல்லாமல் இருக்கும் - என்ற
என் ஆசையில் மண்விழக் கண்டேன்.
பசியால் துடிக்கும் உயிர்கள் கண்டேன்.
பசிக்கவே தெரியாத வயிறுகளும் கண்டேன்.
ஏழையுமுண்டு, கோழையுமுண்டு, ஏமாளி என்று
பிறருக்கு பெயர்சூட்டும் வல்லவர்களும் உண்டு.
காதலுமுண்டு, கற்பழிப்புமுண்டு, கயவர்கள் என்ற
ஒருக்கூட்டம் கடமை தவறாமல் உழைப்பதுமுண்டு.
எல்லாமுமுண்டு என எண்ணும் வேளையில்
கண்டேன் கடவுளை தெருவோர தேநீர்கடையில்.
No comments:
Post a Comment