Thursday 30 December 2010

பிரார்த்தனை

கடவுள்கள் வாழும் மாளிகையில்
புது சலசலப்பு
"இத்தனை கோடி வருடங்கள்
இருந்த அமைதியை கெடுத்து.
எங்கிருந்து வருகிறது
இந்த பேரிரைச்சல்?"
பிரார்த்தனை

கடவுளை அறியாத உலகம்

கடவுளை அறியாத உலகம் கண்டேன்.
ஆச்சரியம், வித்தியாசங்கள் நிறைய இல்லை.

கலகங்கள் இல்லாமல் இருக்கும் - என்ற
என் ஆசையில் மண்விழக் கண்டேன்.

பசியால் துடிக்கும் உயிர்கள் கண்டேன்.
பசிக்கவே தெரியாத வயிறுகளும் கண்டேன்.

ஏழையுமுண்டு, கோழையுமுண்டு, ஏமாளி என்று
பிறருக்கு பெயர்சூட்டும் வல்லவர்களும் உண்டு.

காதலுமுண்டு, கற்பழிப்புமுண்டு, கயவர்கள் என்ற
ஒருக்கூட்டம் கடமை தவறாமல் உழைப்பதுமுண்டு.

எல்லாமுமுண்டு என எண்ணும் வேளையில்
கண்டேன் கடவுளை தெருவோர தேநீர்கடையில்.

பார்வை

பிறவியிலேயே கண் பார்வை தெரியாத ஒருவருக்கு, கண் சிகிச்சை முடிந்து பார்வை கிடைக்கப்போகிறது. உறவினர்கள் அனைவரும் சூழ மருத்துவமனையில் அவன் கண் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு முதன் முதலாக பார்க்கப்போகிறான்.

கண் கட்டுகளை அவிழ்ப்பதற்கு முன் மருத்துவருக்கு ஒரு எண்ணம். அவன் முதன்முதலில் எதைப் பார்க்க ஆசைப்படுகிறானோ, அதை, அவன் முன் நிறுத்தி, பிறகு அவனது கண் கட்டை திறக்கலாம். 


மருத்துவர், அவனது உறவினர்களிடம் கேட்கிறார்.
"இவர் கண்ணில் பார்வை கிடைத்தவுடன் முதலில் என்ன பார்க்க ஆசைப்படுவார்?"
அப்பா சொல்கிறார்,
"அம்மான்னா அவனுக்கு உசிரு டாக்டர், முதல்ல அவங்க அம்மாவ தான் பார்க்கணும்னு ஆசைப்படுவான்".

அம்மா சொல்கிறார்,
"அவனுக்கு கண் குடுத்த தெய்வம், உங்கள தான், அவன் முதன்முதலா பார்க்கணும் டாக்டர்"

உறவினர்கள் ஆளுக்கு ஒரு ஆசையாய் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
மருத்துவர், "சரி, அவரிடமே கேட்டு விடுவோம்...நீங்கள் யாரை முதலில் பார்க்க விரும்புகிறீர்கள்?" என்று அந்த

"மன்னிக்கணும் டாக்டர், முதலில் என் கண் கட்டுகளை அவிழ்த்து விடுங்கள், நான் இது வரை, எதையுமே பார்த்ததில்லை. நான் பார்க்காமல் இருக்கும், ஒவ்வொரு நொடியும், நரகத்தில் இருப்பதைப் போல் உணர்கிறேன்."

தொலை பேசி முத்தம்

கர கர ஒலியில் உன்
தொலை பேசி முத்தம்.
தீந்தமிழ் கவிதையாய் என் காதில்.
சூழல் மறந்த நிலையில்
சில வினாடிகள்.
என் தேவை உனையன்றி யாரறிவார்

எந்தாய் பத்தி

எந்தாய் பத்தி கவிதை எழுத
தடால்னு கிளம்பிட்டேன்.

ஒண்ணும் வரலையேன்னு
ஓரமா இருந்திட்டேன்.

உலகமே எழுதிருச்சு
எனக்கு ஒரு வழியில்லை.

நான் கவிதை எழுத
என் தாய் ஒண்ணும் செய்யலையோ?

நான் கவிதை எழுதணும்னு
அவ எதையும் செஞ்சதில்ல.

அவ மேல கவிதை சொல்லி
அனுபவிக்க அவளுமில்ல.

கிழிஞ்ச சட்ட போட்டப்பவே
"ராசா மாதிரி இருக்கேனு" சொன்னவ.

என் கிறுக்கல கவிதைனு சொன்னா
இல்லேன்னா சொல்லுவா!

கேவலம்

பிடிக்காம புருசன் கட்டி
புள்ள பெத்துக்கிறத விடவா
புடிச்சவன்கூட ஓடிப்போறது
கேவலாமா போச்சு