Thursday 14 November 2013

பாரதத்தாய்

என் அலுவலகத்தில் வேலை செய்யும் எனக்கு தெரிந்த ஒரு நபருடன், இன்னொருவர் எதையோ தனது மடிக்கணினியில் காட்டிக்கொண்டிருந்தார்.
தற்செயலாக அந்தப்பக்கம் சென்ற நான், தமிழ் நண்பர்கள் பேசிக்கொண்டிருப்பதால் அங்கே என்ன நடக்கிறது என்று அருகில் சென்று பார்த்தேன்.

அப்போது அவர் வெளியூர் சென்றதையும், சென்ற போது எடுத்த புகைப்படங்களையும் காட்டிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் கடவுள் சிலையின் புகைப்படம் வந்தது. அந்த கடவுளின் பின்புறம் ஒரு சிங்கம் நிற்கிறது. கையில் ஆயுதங்கள் என ஒரு இந்து கடவுள் சிலைக்கு என்ன என்ன லட்சணங்கள் இருக்குமோ அனைத்தும் இருந்தது. நாங்கள் எங்களுக்கு தெரிந்த பெண் தெய்வங்களின் பெயர்களைச் சொன்னோம். அவரோ, கையில் கொடி உள்ளது பாருங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.


பின்னர் அவரே, இது பாரதத்தாயின் சிலை என்றார். மேலே காட்டப்பட்டது போன்ற ஒரு படம். அந்த புகைப்படத்தில் கோடியில் வண்ணங்கள் எதுவும் இல்லை. அதனால் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் எனக்கு ஒரு கவலை, பாரதத்தாய் அனைத்து மதத்தினருக்கும் பொது தானே, இப்படி இந்து கடவுள் போன்ற தோற்றம் சரியில்லையே என்றேன். மேலும் கிருத்துவ மற்றும் முஸ்லிம் மக்களும் இந்தியாவில் தானே இருக்கிறார்கள் என்றேன். அதற்க்கு அவர் சொன்ன பதில் இங்கே சொல்ல முடியாது. ஆனால், என்னை மிகவும் வருத்தமுடையச் செய்தது. 

இதைப் பதிவு செய்வது கூட தவறு என்றுதான் எண்ணினேன். பிறகு, நமது பதிவைப் படிக்கும் 4 பேருக்கு இது ரொம்ப ஓவர், என முடிவு செய்து பதிவிட்டுவிட்டேன்.

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் ..."
- தாயுமானவர்