Monday 14 July 2008

வாழ்க்கை?

முதலில் எனது எண்ணங்களை கட்டுரையாகத்தான் எழுத நினைத்தேன், பிறகு அதை ஒரு கேள்வி பதில் வடிவமாக மாற்றி அமைத்திருக்கிறேன்.

கேள்வி பதில் வடிவம். நான் மிகவும் ரசித்து /விரும்பி படிக்கும் ஒரு வடிவம்.

வாழ்க்கை?
வாழ்வது.

வாழ்க்கையின் முடிவு என்ன?
மரணம்.

மரணத்திற்குப்பிறகு?
ஒன்றும் இல்லை.

வாழ்கையை வெல்ல முடியுமா?
வாழ்கையை வாழ மட்டுமே முடியும்.

வாழ்கையில் சாதிப்பது என்ன?
வாழ்வது.
மண்ணில் பிறந்த எந்த ஒரு ஜீவனும், இது நாள் வரைக்கும் எதையும் சாதித்து விட வில்லை. இனி வரும் நாட்களிலும் எதையும் சாதிக்க* முடியாது.

கடவுள் உண்டா?
இல்லை.

ஏன் கடவுள் இல்லை?
கடவுள் இல்லை என்று சொன்ன பிறகும் நான் இருக்கிறேனே அதனால் தான்.

மறு பிறவி நம்பிக்கை?
இல்லை.

மறு பிறவி நம்பிக்கை இல்லை என்று எப்படி உருதியாக சொல்லுகிறீர்கள்?
மறு பிறவி உண்டு என்றால் போன பிறவியும் உண்டு.
போன பிறவியில் நான் யார் என்று எனக்கு தெரிய வில்லை. மறு பிறவியில், சென்ற பிறவி நியாபகம் இருக்கப் போவதும் இல்லை. பிறகு எப்படி உண்டு என்று சொல்வது.



*இங்கு சாதனை என்பது டென்சிங் - EVEREST மாதிரி அல்ல.
மனிதர்கள் தவிர மற்ற ஜீவன்களும் பூமியில் வாழ்கின்றன - மனிதர்கள் போலவே.

அடைமழை

காலையில் ஜன சமுத்திரத்தில்
விழுந்த துளியாய் கலந்து,
சூடு தாங்கி, ஆவி போய்,
மாலையில் மேகத்திலிருந்து பிரிந்த நீராய்
வீடு நோக்கி வருகிறாய்.
வீட்டுப் பாத்திரத்தில் கொதிக்க.

உன் காட்டில் என்றும் அடைமழை தான்.