Monday, 14 July 2008

வாழ்க்கை?

முதலில் எனது எண்ணங்களை கட்டுரையாகத்தான் எழுத நினைத்தேன், பிறகு அதை ஒரு கேள்வி பதில் வடிவமாக மாற்றி அமைத்திருக்கிறேன்.

கேள்வி பதில் வடிவம். நான் மிகவும் ரசித்து /விரும்பி படிக்கும் ஒரு வடிவம்.

வாழ்க்கை?
வாழ்வது.

வாழ்க்கையின் முடிவு என்ன?
மரணம்.

மரணத்திற்குப்பிறகு?
ஒன்றும் இல்லை.

வாழ்கையை வெல்ல முடியுமா?
வாழ்கையை வாழ மட்டுமே முடியும்.

வாழ்கையில் சாதிப்பது என்ன?
வாழ்வது.
மண்ணில் பிறந்த எந்த ஒரு ஜீவனும், இது நாள் வரைக்கும் எதையும் சாதித்து விட வில்லை. இனி வரும் நாட்களிலும் எதையும் சாதிக்க* முடியாது.

கடவுள் உண்டா?
இல்லை.

ஏன் கடவுள் இல்லை?
கடவுள் இல்லை என்று சொன்ன பிறகும் நான் இருக்கிறேனே அதனால் தான்.

மறு பிறவி நம்பிக்கை?
இல்லை.

மறு பிறவி நம்பிக்கை இல்லை என்று எப்படி உருதியாக சொல்லுகிறீர்கள்?
மறு பிறவி உண்டு என்றால் போன பிறவியும் உண்டு.
போன பிறவியில் நான் யார் என்று எனக்கு தெரிய வில்லை. மறு பிறவியில், சென்ற பிறவி நியாபகம் இருக்கப் போவதும் இல்லை. பிறகு எப்படி உண்டு என்று சொல்வது.



*இங்கு சாதனை என்பது டென்சிங் - EVEREST மாதிரி அல்ல.
மனிதர்கள் தவிர மற்ற ஜீவன்களும் பூமியில் வாழ்கின்றன - மனிதர்கள் போலவே.

9 comments:

  1. "மறு பிறவி நம்பிக்கை?
    இல்லை.
    ...
    மறு பிறவி உண்டு என்றால் போன பிறவியும் உண்டு.
    போன பிறவியில் நான் யார் என்று எனக்கு தெரிய வில்லை.
    "

    உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், மறுபிறவி என்பதே இல்லை என்று சொல்வீர்களானால் அதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். நமக்குத் தெரியவில்லை என்பதாலேயே அது இல்லாத ஒன்று ஆகிவிடாது :)

    ReplyDelete
  2. manki தங்களது வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி.

    /* மறு பிறவி உண்டு என்றால் போன பிறவியும் உண்டு.
    blah blah blah. பிறகு எப்படி உண்டு என்று சொல்வது */

    எப்படி உண்டு என்று சொல்வது? இது தான் என்னுடைய பதிலும்.

    கஜினி படத்தில் சூர்யா விடம், அந்த வீட்டு (Security)காவலாளி சொல்லும் வசனம்.

    "தெரியும் சார், உங்களுக்கு 15 நிமிசத்துக்கு மேல எதுவும் நியாபகம் இருக்காது, நான் தானே சார் உங்களுக்கு மூனு வருசமா சாப்பாடு வாங்கிட்டு வாரேன். இப்போ உங்களுக்கு லிப்ட்டுக்கு வழி தெரியனும் அது தானே? "

    இதில் "நான் தானே சார் உங்களுக்கு மூனு வருசமா சாப்பாடு வாங்கிட்டு வாரேன்" என்ற வசனமும் சென்ற பிறவி கோட்பாடும் ஒன்று தான்.

    என்னை பொறுத்த மட்டில் ;-)

    ReplyDelete
  3. hai,
    very very super.....

    by
    joepriyan

    ReplyDelete
  4. ஜோபிரியன் அவர்களே,

    தங்கள் வருகைக்கும் கமெண்ட்டுக்கும்
    நன்றி.

    ReplyDelete
  5. "ஏன் கடவுள் இல்லை?
    கடவுள் இல்லை என்று சொன்ன பிறகும் நான் இருக்கிறேனே அதனால் தான்.
    "

    கடவுள் என்று நீங்கள் வரையறுப்பது இல்லை. அவ்வளவுதான். (The one that you define as god doesn't exist.)

    "குருவும் சீடனும்" என்ற புத்தகத்திலிருந்து:

    கேள்வி: நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறீர்களா?
    குரு: நம்பிக்கை என்ற சொல்லே சரியில்லையே. நான் ஒரு விஞ்ஞானி. உண்மையைத் தேடிக் கண்டுபிடித்து அங்கீகரிப்பதுதான் என்னுடைய வழக்கம். கடவுள் இருப்பது கடவுள் குறித்த வரையறை மூலமே. அதனால் அந்த வரையறை தவறா சரியா என்று கேட்க வேண்டும். அப்படியென்றால் கடவுளுக்கு நான் கொடுக்கும் வரையறையை முதலில் தேட வேண்டும். உங்களுக்குத் தவறு நடக்கும்போதெல்லாம் எது சரியாகவே இருக்கிறதோ அதுதான் கடவுள். What is that which is right when you are wrong is God.

    ReplyDelete
  6. Thanks for your comment.

    /*கடவுள் என்று நீங்கள் வரையறுப்பது இல்லை. அவ்வளவுதான். (The one that you define as god doesn't exist.)*/
    நன்றி! நானும் அதே தான் சொல்கிறேன். கடவுள் என்று நீங்கள்/குரு வரையறுப்பதும் இல்லை.

    நான் ஒரு விஞ்ஞானி இல்லை.

    கடவுளுக்கு வரையறை கிடையாது. க்ச்டுர்ச்து க்கு எப்படி எந்த ஒரு வரையரயும் இல்லையோ, இருக்க முடியாதோ அதுபோல்.
    (க்ச்டுர்ச்து - ஏதோ ஒரு combination எழுத்துக்கள்)

    /*உங்களுக்குத் தவறு நடக்கும்போதெல்லாம் எது சரியாகவே இருக்கிறதோ அதுதான் கடவுள். What is that which is right when you are wrong is God*/

    Could you please give a sample?

    சரி மற்றும் தவறுக்கு வரையறை என்ன?

    இதற்கிடையில் எங்கிருந்து கடவுள் வந்தது?

    அக்கறைக்கு இக்கறை பச்சை.

    ReplyDelete
  7. கொஞ்சம் அதிகமாகவே எழுதி விட்டேன். என்னுடைய வலைப்பதிவில் என்னுடைய பதில்களை பார்க்கவும் (இங்கே: http://kuselan.blogspot.com/2009/01/blog-post_22.html)

    ReplyDelete
  8. கடவுள் என்றொருவர் இல்லாவிட்டால் "கடவுள்" என்ற வார்த்தை எப்படி வந்தது? அப்படியென்றால் வார்த்தையில் இருக்கும் "கடவுள்" யார்?

    ReplyDelete
  9. வணக்கம் கோ கணேஷ்.

    தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

    கடவுள் இருப்பதால் தான் கடவுள் என்ற வார்த்தை வந்தது என்கிறீர்களா?

    பிறகு ஏன் பசி, பஞ்சம், கொலை .... போன்ற வார்த்தைகள் வந்தன?

    கடவுள் இருந்திருந்தால், மேற்கூறிய எதுவும் இல்லாமல் இருந்திருக்கும் என்பது என்னுடைய கருத்து.

    ReplyDelete