Thursday, 9 April 2009

தீம்பண்டம்

பஸ் எடுத்து பத்து நிமிஷம் கூட ஆகல
பசிக்குது இந்த பாழாப்போன வயுத்துக்கு.
பை நெறைய பண்டம் இருந்தும்
எடுக்க விட மாட்டேங்குது 
எடுபட்ட பய மனசு.  
எப்பிடி விடும்னு வேண்டாம்? 
இது எம் மவளுக்கு வாங்குனதாச்சே!

No comments:

Post a Comment