கடவுள் என்னும் மாயை-யை
கண்டவர் இல்லை இதுவரை.
கண்டதாக சொல்பர் எவரும்
காட்டியதில்லை இதுவரை.
கடவுளுக்கான விளக்கம்
ஆயிரம் உண்டு.
இயற்கை என்றும்,
ஏதோ ஒரு சக்தி என்றும்,
சொர்க்கம் என்றும்,
தர்க்கம் என்றும்.
யார் சொல்லியும் கேட்க
கடவுள் என்ன கதையா?
உனக்கான கடவுளின் விளக்கம் என்ன?
உன்னையே ஏமாற்றுவதும்,
உலகத்திற்காக நடிப்பதும் ஏனோ?
No comments:
Post a Comment