Thursday, 30 December 2010

பார்வை

பிறவியிலேயே கண் பார்வை தெரியாத ஒருவருக்கு, கண் சிகிச்சை முடிந்து பார்வை கிடைக்கப்போகிறது. உறவினர்கள் அனைவரும் சூழ மருத்துவமனையில் அவன் கண் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு முதன் முதலாக பார்க்கப்போகிறான்.

கண் கட்டுகளை அவிழ்ப்பதற்கு முன் மருத்துவருக்கு ஒரு எண்ணம். அவன் முதன்முதலில் எதைப் பார்க்க ஆசைப்படுகிறானோ, அதை, அவன் முன் நிறுத்தி, பிறகு அவனது கண் கட்டை திறக்கலாம். 


மருத்துவர், அவனது உறவினர்களிடம் கேட்கிறார்.
"இவர் கண்ணில் பார்வை கிடைத்தவுடன் முதலில் என்ன பார்க்க ஆசைப்படுவார்?"
அப்பா சொல்கிறார்,
"அம்மான்னா அவனுக்கு உசிரு டாக்டர், முதல்ல அவங்க அம்மாவ தான் பார்க்கணும்னு ஆசைப்படுவான்".

அம்மா சொல்கிறார்,
"அவனுக்கு கண் குடுத்த தெய்வம், உங்கள தான், அவன் முதன்முதலா பார்க்கணும் டாக்டர்"

உறவினர்கள் ஆளுக்கு ஒரு ஆசையாய் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
மருத்துவர், "சரி, அவரிடமே கேட்டு விடுவோம்...நீங்கள் யாரை முதலில் பார்க்க விரும்புகிறீர்கள்?" என்று அந்த

"மன்னிக்கணும் டாக்டர், முதலில் என் கண் கட்டுகளை அவிழ்த்து விடுங்கள், நான் இது வரை, எதையுமே பார்த்ததில்லை. நான் பார்க்காமல் இருக்கும், ஒவ்வொரு நொடியும், நரகத்தில் இருப்பதைப் போல் உணர்கிறேன்."

No comments:

Post a Comment