Friday 4 January 2008

ஒரு வெள்ளிக்கிழமை

மாலை மணி 6.05. வெள்ளிக்கிழமை ஆனா போதும் டீம் மீட்டிங்னு சொல்லி பிளேடு போட்டு உயிரை வாங்க வேண்டியது. உருப்படியா ஒரு வேலையும் செய்யலைன்னு சொல்றதுக்கு ஒரு மீட்டிங். எவனாவது வெள்ளிக்கிழமை 5.30க்கு மேல வேல செய்வானா? நேரம் ஆக ஆக எனக்கு traffic பற்றிய பயம் வேறு அதிகரித்துக்கொண்டே இருந்தது. இது எல்லாம் இந்த 'சந்தனால' வந்தது தான்.

சந்தன்...என்கூட கம்பெனிலே வேலை பார்க்கிறவர். அவர் வேற கம்பெனிக்கு மாறி போறார். அதுக்கு treat குடுக்க தான் லஞ்ச்க்கு வெளிய கூட்டிட்டு போனார். சாப்பிட்டு திரும்புறதுக்கு 4 மணி ஆகிடுச்சு. மனுஷன் என்னமா செலவு பண்றான் தெரியுமா? சரி, இருக்கப்பட்ட மகராசன் செலவு பண்றான். நாலு மாசத்துக்கு முன்னாலே தான் இந்த கம்பெனி ல சேர்ந்தான், அதுலே ரெண்டு மாசத்த ட்ரைனிங் னு சொல்லி கழிச்சுட்டன். இப்போ வேற கம்பெனி போறான்.

எதுக்கு போறனா? "தமிழ்நாட்டுலே தமிழ் படிச்சவன் சாக, காரணமா இல்லை" ;-) அது மாதிரி software ஆளு கம்பெனி மாறுவதற்கும் காரணம் சொல்லனுமா என்ன?
"நல்ல சம்பளம், அது தான் போறேன்னு" சொன்னான். எவ்வளவுன்னு கேட்காதீங்க, Confidential. என்ன, ஒரு மாசத்துக்கு, வரி கட்டியது போக, குத்து மதிப்பா 8000 ரூபாய் அதிகமா கிடைக்கும்.

இப்போ எனக்கு, அது இல்ல பிரச்சனை, இவனுங்க எப்ப meeting அ முடிக்கிறது, நான் எப்போ வீட்டுக்கு போறது. இது அவுறது இல்லை.

ஏழு மணியை நெருங்கிக்கொண்டு இருக்கும் போது, meeting ஒரு முடிவுக்கு வந்தது. அடுத்த ஐந்தாவது நிமிடம், நான் என் இரு சக்கர வண்டியுடன் company ஐ விட்டு வெளியேறினேன்.

நகரத்தின் மிக முக்கியமான சாலைகளில் ஒன்றில் பயணம். தூரத்தில் இருந்து பார்க்கும் போதே தெரிந்தது மிக நீளமான, அகலமான traffic.
ஐயோ! செத்தேன், இனி தொர் தொர் னு நகர்ந்து வீட்டுக்கு போறதுக்கு எப்படியும் 2 மணி நேரம் ஆகும்.

ஏறக்குறைய ஐந்து சிக்னல்களை கடந்து செல்ல வேண்டும். சீக்கிரமா கிளம்பி இருந்தா நாற்பது நிமிடத்தில் வீட்டுக்கு சென்று இருக்கலாம். ம்ம் என்ன பண்ண, சிக்னல் விழுந்ததும் வண்டியை நகர்த்தினேன். மூன்று முறை சிக்னல் மாறிய பிறகே முதல் சிக்னலை கடக்க முடிந்தது.

ஒரு சிக்னலில் ஆடோமடிக் விளக்குகள் இல்லாததால், ஒரு போக்குவரத்து காவலர், போக்குவரத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டு இருந்தார். அவர் நிமிடகணக்கை வைத்து சிக்னலை மாற்றவில்லை, போக்குவரத்து நெரிசலை வைத்தே சிக்னலை மாற்றுகிறார்.

அது எப்படித்தான் தெரியுமோ? சரியாக நான் சிக்னலை கடக்க வருவதற்கு ஒரு சில வாகனங்களுக்கு முன்பாகவே சிக்னல் மாற்றப்பட்டது. சில இரு சக்கர வாகன ஓட்டிகள் சிக்னலை மீறி சென்றார்கள்.
"போவோம், அவர் நம்மை பார்த்தல் நிருதுவோம்னு" நினைச்சு வண்டியை நகர்த்தினேன். ஒரு நாலு மீட்டர் தொலைவில், என்னுடன் வண்டிகள் எதுவும் வராதால் சந்தேகம் அடைந்து திரும்புபவனை போல திரும்பி பார்த்தேன்.

அவர், ஒரு சலிப்பான பார்வையுடன், என்னையே பார்த்தார். என்னுடன் வந்த ஒரு சில வண்டிகள் திரும்பி பார்க்காமல் சென்று விட்டன. அத்தாம் பெரிய ரோட்டில், எல்லா வண்டிகளும், அவர் சொன்ன இடத்தில் நின்றது நான் மட்டும் தனியாக என் வண்டியுடன் நாலு மீட்டர் தள்ளி நிற்கிறேன். பிறகென்ன வண்டியை neutral செய்து விட்டு, காலால் நகர்த்திக்கொண்டே பின்னால் வந்தேன்.

சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும், அப்போது தான் ஒன்றை கண்டுபிடித்தேன்,
நடு ரோட்டில் நின்றுகொண்டு போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதும் சிரமமான வேலை தான்.

ஆமா, இவருக்கு சம்பளம் என்ன இருக்கும்? ஒரு 7000 ரூபாய் இருக்குமா? ஆங்... சொல்ல மறந்துட்டேனே, treat செலவும் கூட 7000 ரூபாய் தான்.

4 comments:

  1. "பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல" ரேஞ்சுக்கு எழுதிட்டீங்க போங்க.

    "அது மாதிரி software ஆளு கம்பெனி மாறுவதற்கும் காரணம் சொல்லனுமா என்ன?"

    சூப்பர்!


    "என்னுடன் வந்த ஒரு சில வண்டிகள் திரும்பி பார்க்காமல் சென்று விட்டன."

    அதுல ஒருத்தன் மட்டும் உங்களை நல்லவன்னு சொன்னானே... அதைச்சொல்லலை? ;-)


    "ஆமா, இவருக்கு சம்பளம் என்ன இருக்கும்? ஒரு 7000 ரூபாய் இருக்குமா?"

    ஏழாயிரத்தைவிட அதிகமாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். ஆனாலும் நிச்சயமாய் நம்மைவிடக் குறைவாகத்தான் சம்பாதிப்பார்கள். வேலை, சர்வ நிச்சயமாய் நம்மைவிடக் கஷ்டமான வேலைதான்.

    முதல் பதிவிலேயே அசத்திட்டீங்க. தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  2. நன்றி Manki.

    //ஏழாயிரத்தைவிட அதிகமாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்//

    எனக்கும் தெரியவில்லை, அது தான் "ஒரு 7000 ரூபாய் இருக்குமா?" னு சொல்லிட்டேன்.To be in safe side.

    இந்த சம்பவம் உண்மையிலேயே எனக்கு நடந்தது. ஒரு 40% கற்பனை
    ;-)

    ReplyDelete
  3. Enna Amar, Neengalae Software Life pathi ippadi eludhalamma.... Adhu sari...Treat kudutha Happyaa njoy panna vendiyadhu dhanae... :) Anyways Intresting...

    ReplyDelete
  4. Thanks vidya.

    blog headinge சொல்லுதே.

    Don't take it seriously.

    ReplyDelete