மனித உயிர், மனிதனின் மூளையில் உருவாகி, மூளையோடே மரணம் எய்துகிறது. இதில் தான் எல்லாமும் (தாய், தந்தை, ஜாதி, மதம், கடவுள், உயிர் பற்றிய நம்பிக்கை, ஏனைய அனைத்தும்) இருக்கிறது.
அப்படியானால், பிறக்கும் போது, ஒரு குழந்தை - அது உயிர் இல்லையா?
இல்லை, அதுவும் உயிர் தான். ஆனால், அது ஒரு புதிதாக தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கு போல. புதிதாக மாட்டப்பட்ட மெமோரி-கார்ட் போல.
மூளை செயல்படமால், உடல் உறுப்புகள் செயல்பட முடியாதா? அப்போது உயிர் இருக்காதா? செயல்படும். அப்போது மருத்துவர்கள்அந்த மனிதனை (அவரின் உயிரை) காப்பாற்ற முயல்வதில்லை. அவரது உறுப்பைக்கொண்டு, வேறு ஒரு மனிதனின் உயிரை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.
அந்த உறுப்புகள், ஒரு செயல்படாத கணினியின் கீ-போர்ட் போல. அந்த கீ-போர்டினால், அந்த கணினிக்கு எந்த பயனும் இல்லை.
ஒரு குழந்தை பிறந்தவுடன், வேறு ஒரு ஜாதி/மதம் பின்பற்றும், தாய் தந்தையால் வளர்க்கப்படுமேயானால், வேறு எந்த உதவியும் இல்லாமல், அந்த குழந்தையால், தன் உண்மையான தாய் தந்தையை கண்டு பிடிக்க முடியாது.அது தன்னுடைய, தற்போதைய நம்பிக்கைகளையே, தொடர்கிறது.
மேலே சொன்னது உண்மையென்றால், பிறக்கும் எந்த உயிரும், தாய், தந்தை, ஜாதி, மதம், கடவுள், உயிர் பற்றிய நம்பிக்கையை, அதன் சமூகத்தில் இருந்தே பெற்றுக்கொள்கிறது, இதுவும் உண்மை தான்.
இப்படிப் பிறரால்/சமூகத்தால், நம் மீது திணிக்கப்பட்ட ஒன்றை 'இது சரியா?' என கேள்விகேட்பது தவறா? ஒரு மனிதன், உங்களிடம் வந்து நான் தான் கடவுள் என்றால், அவனை கடவுளாக ஏற்றுக்கொள்ள, அவனுக்கு என்னவெல்லாம் பரீட்சை வைப்பீர்கள்? இதை எப்போதாவது உங்கள்/நீங்கள் நம்பும் கடவுளுக்கு வைத்திருப்பீர்களா? நமது நம்பிக்கையை சோதித்துப் பார்ப்பதில் என்ன தவறு?
இந்த விளக்கம்,உயிர் பற்றிய, உலகின் எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறாது. இருந்தாலும், இது தான் என் விளக்கம்.

No comments:
Post a Comment