'உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' - திருமூலர்
பரவாயில்லையே, பல வருசங்களுக்கு முன்னாடியே, நம்மல போல ஒருத்தர்
யோசிச்சு இருக்காரேன்னு சந்தோசமா இருக்கு. திருமூலர், உயிர் பற்றி என்ன கருத்து வைத்திருந்தார் என்று எனக்கு சரியாக தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் உடம்பே உயிர். தேவைகளை தீர்த்துக்கொள்ளும் உடல், உயிருடன் இருப்பதாக அறியப்படுகிறது. உயிர் பிரிவதன் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட, உடலின் பாகங்கள் செயல் இழப்பதால் தான். வேறு காரணங்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
ஆண்டாண்டு காலமாக இருக்கும் உயிர்/உயிர் சுழற்சி/மறு பிறப்பு/இன்னும் பல உயிர் சார்ந்த நம்பிக்கைகளை, பொய்/இல்லை என்று கூறும் போது யாராலும் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது தான். முதன் முதலில், பூமி "கோள" வடிவுடையது என்று கூறிய போது, யாரும் நம்பியிருக்க மாட்டார்கள் தான். ஆனால், சில காலத்தில் பூமியின் வடிவை நிருபிக்கும் முயற்சியில் வெற்றி அடைந்து எல்லோரையும் நம்பவும் வைத்து விட்டார்கள். அதுபோல "உடம்பு=உயிர்" இந்த விதியை , நிரூபிக்கும் எந்த ஒரு சோதனையும் என்னிடம் இல்லை. நான் நிரூபிக்க ஆசைப் படவுமில்லை. நான் அறிந்தது என் மட்டும். நானே(வேறு எங்கும் இருந்து இல்லாமல்) உணரும் சில விஷயங்கள், நிரூபிக்கப்படவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பது இல்லை.
ஆனால் என் வாழ்நாள் முழுவதும் நடக்கும் சம்பவங்களின் மீது இந்த விதி சோதனைக்குட்படுத்தப்படும். என்றாவது ஒரு நாள், என் சோதனையின் முடிவு மாறும் பட்சத்தில். அந்த சோதனையும் அதனால் அறியப்படும் விவரங்களும் இங்கே விலாவாரியாக பதிவு செய்யப்படும்.
கொஞ்சம் நான்-சென்ஸ்:
உறுப்பு - இது ஒரு செல்லாகவும் இருக்கலாம், செல்லை விட சிரிதானதாகவும் இருக்கலாம்.
உடம்பின் உறுப்புகளை மாற்றுவதன் மூலம், மனிதன் சாகாமலே இருக்க முடியும்.
மூப்படைவது? இதற்கும் ஏதோ ஒரு செல்லோ அல்லது உறுப்போ தான் காரணமாக இருக்க வேண்டும். இது மிகவும் சிறியதாக இருக்கலாம், மிகவும் அதிகமாக இருக்கலாம். ஆனால் அறிவியல் வளர்ச்சி, அதையும் சாதிக்கும்.
இப்போ - "வந்தவரெல்லாம் தங்கி விட்டால்...இந்த மண்ணில் நமக்கே இடமேது?" - எல்லாருமா சேர்ந்து கிரகம் கிரகமா இடம் தேடி அலைய வேண்டியது தான். டைம் தான் இருக்கே ;)

No comments:
Post a Comment