Thursday, 13 October 2011

அசைவ உணவு, தட்டான் பூச்சி, பருப்பு நண்பர்

ரெண்டு மாசம் இருக்கும், அசைவ உணவு சாப்பிடுறத நிறுத்திட்டேன்.
நான் இதை யார் கிட்டயாவது சொன்னா, உடனே "ஏன்?" னு கேக்குறாங்க.
என்னோட பதில்: ஏன் சாப்பிடனும்?
எனக்கு வேற ஒன்னும் பதில் தெரியல. "Survival of the fittest" "EcoSystem Balance" இப்படி என்னென்னமோ சொல்றாங்க. நான் இதை யாருக்காகவும் செய்யல, என்னோட சந்தோசத்துக்காக தான் செய்றேன்.

ஒரு காலத்துல, வெளக்கமாத்துக் குச்சியால, தட்டான் பூச்சிய வெரட்டி வெரட்டி வேட்டையாடி இருக்கேன். நேத்து, வண்டில மோத வந்த தட்டான் பூச்சிக்காக, வண்டிய சடன் ப்ரேக் போட்டு நிறுத்திட்டேன்.  அப்ப, கொஞ்சம் லூசுத்தனமா இருந்தாலும், கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு.
 
இன்னும் ஒரு முக்கியமான விஷயம். என்னுடன் வேலை செய்ற ஒரு நண்பர். அவர் எப்போ பார்த்தாலும் ஏதோ பெரிய சாதனை செஞ்ச/பருப்பு மாதிரி தான் பேசுவார். நான் எப்பவுமே, யாரோட மனசும் புண்படகூடாதுன்னு கொஞ்சம் (இல்ல ரொம்பவே) அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போற டைப். திடீர்னு நேத்து, அவர் ஏதோ ஆரம்பிக்க, நான் பாட்டுக்கு, என் மனசுல தோணுனத பேசிட்டேன் (கிட்ட தட்ட நீ என்ன பெரிய புடுங்கியா ரேஞ்சு). அவர் அதை எதிர்பார்த்திருக்க மாட்டார்னு நினைக்கிறேன், அதுக்கு அப்புறம் அவர் பேசும் போது ஒரு தயக்கம் இருந்துச்சு. இதை ஏன் செஞ்சேன்? மறுபடியும், என் கிட்ட எந்த ஒரு பதிலும் இல்ல.
 
கொஞ்ச நேரத்துல, அவரும் எதுவும் நடந்த மாதிரி காட்டிக்கல, நானும் காட்டிக்கல. நான் மறுபடியும் என்னோட அட்ஜஸ்ட் டைப்க்கு திரும்பிட்டேன், அவரும் பருப்பு டைப்புக்கு திரும்பிட்டார்.
 
இப்பெல்லாம், நான் செய்ற பல விஷயங்கள், நான் செய்ற மாதிரியே தெரியல. ம்ம்..பார்க்கலாம் இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதுன்னு.

3 comments:

  1. இதே மாதிரி என்னோட வாழ்க்கையிலயும் ஒன்னு நடந்துச்சு. மதுரைல படிச்சிட்டிருந்த காலம். நாங்க மும்பை போயிருந்தோம். சாயங்காலம் பாட்டு டான்ஸுன்னு அந்த ஊர்க்காரங்க என்ஜாய் பண்ணுனதைப் பாத்து கிட்டத்தட்ட எல்லாருக்குமே "நம்மால உள்ள பூந்து ஆட முடியலையே"னு கொஞ்சம் வருத்தம் தான். ஆனாலும் வெளிப்படையா யாரும் புலம்பிக்கலை. "பார்ரா... நம்மளுந்தான் இருக்கோமே" அப்படிங்கிற ரேஞ்சுல நிதானமாத்தான் பேச்சு வார்த்தை எல்லாம் இருந்துச்சு.

    அப்புறமா அடுத்த நாளோ அதுக்கடுத்த நாளோ இதைப்பத்தி "தலைவர்" சொன்னார்: "நம்மளோட பண்பாடு கலாச்சாரத்தை எல்லாம் மறந்துட்டு இப்படியெல்லாம் நடந்துக்கிறது எனக்குப் பிடிக்கலை". (யாரது தலைவர்னு கேட்காதீங்க, உங்களுக்குத் தெரியும் யார் தலைவர்னு.) அப்போ நான் விவேகானந்தர், ஓஷோ எல்லாம் படிச்சு ஒரு ரேஞ்சுல தான் இருந்தேன். ரொம்ப சாதாரணமா நானும் சொன்னேன், "ஒருவனுக்கு ஒருத்தி, கலாச்சாரம் பண்பாடுன்னு வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிகிறாங்க. உண்மையில நம்ம கலாச்சாரம் எந்த மாதிரி இருந்துச்சுன்னு ஏகப்பட்ட பேருக்கு ஒன்னுமே தெரியாது." "சாடைமாடையா என்னைப் பத்தி ஏதோ சொல்ற மாதிரி இருக்கே..." -- அவர். "சாடைமாடையா என்ன, நேரடியாத்தான சொல்றேன்" -- இது நான். இதோட பேச்சு நின்னு போச்சு. ரெண்டு பேருமே இதைப்பத்தி அப்புறம் பேசிக்கலை. இப்போ வரைக்கும் நான் ஏன் தேவையில்லாம வார்த்தையை விட்டேன்னு எனக்குத் தெரியலை.

    ReplyDelete
  2. தலைவர் தெரியாமலா? நல்லா தெரியும். அவரையும் தெரியும், அவர் பேச்சும் தெரியும்.

    "மாற்றம் என்பது மட்டுமே மாறாத ஒன்று" இதை ஒத்துக்கொள்ளும் பலர், "கலாச்சாரமும் மாறும்" இதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள்.

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி திரு.சிவம்ஜோதி.
    நீங்க "திருமூலரும் நானும்" இடுகைக்கு போட வேண்டிய கமெண்டை, இங்கே போட்டு விட்டீர்களா என்ன :)

    எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
    கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
    உண்ணாடி உள்ளே ஒளி பெற நோக்கிடில்
    கண்ணாடி போலக் கலந்து நின்றானே. -திருமூலர்

    என்ன ஒரு ஆழமான கருத்து.
    தங்களுக்கு மேலும் ஒரு நன்றி நான் திருமூலரை வியக்க/ரசிக்க இன்னும் ஒரு பாடல் தந்தமைக்கு.

    நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக நீங்கள் கூறியவைகளை கேட்கிறேன்.

    ReplyDelete