இந்த பதிவில், "ஏழாம் அறிவு" திரைப்படம் பற்றிய எனது சிந்தனைகள்
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படம் பார்த்துவிட்டு பதிவை தொடரவும்.
ஏனோ தெரியவில்லை, இந்த படம் பரபரப்பாக பேசப்பட்ட நாட்களில் இருந்தே இந்த படம் தோல்வி அடைய வேண்டும் என என் மனம் விரும்பியது. ஆனால், படம் பார்த்த போது, இந்த படக்குழுவின் மீது பரிதாபம் தான் தோன்றியது. இந்த படம், உறுதியாக ஒரு குப்பை படம் இல்லை. நான் "டைம்" படம் பார்த்திருக்கிறேன். இது லாஜிக் பார்க்ககூடாத ஒரு தமிழ் பற்றுள்ள மசாலா படம்.
படம் பார்க்கும் முன்னே, முதல் 15 நிமிடங்கள் வரும் காட்சிகள் நன்றாக
இருக்கும் என்றார்கள், எனக்கு அதுவும் பிடிக்க வில்லை.
இந்த படம் செய்த ஒரே நல்ல விஷயம் "போதி தர்மர்"-ங்கிற ஒரு மனிதனை,
தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்து விட்டார்கள்.
ஆனால், அவரு காத்த வசியம் பண்ணுவாரு, தீய வசியம் பண்ணுவாரு, மனுசங்கள வசியம் பண்ணுவாரு, அப்படி இப்படின்னு, அவரை ஒரு மந்திரவாதி மாதிரி காட்டி இருக்கிறார்கள்.
தற்காப்புக் கலைகள் வரைக்கும் சரி, கைகளைச் சுழற்றி மண்ணில் உள்ள புழுதியைக் கொண்டு ஒரு புழுதிப் புயலையே உருவாக்குவது, எந்த விதத்திலும் படத்துக்கோ, கதைக்கோ உதவ வில்லை.
சூர்யா, சிக்ஸ் பேக் காட்டுறாரு. இவரு பண்ண சண்டைக்கு பயிற்சி வேற.
அப்படி ஒன்னும் பிரமாதமா இல்ல.
ஸ்ருதி, அழகா இருக்காங்க. நல்ல குரல், நல்லா தமிழ் உச்சரிக்கிறாங்க.
தமிழ் பேசும் போது, வார்த்தைகளை கடிச்சு கடிச்சு பேசுற மாதிரி இருக்கு,
ஆனாலும் நல்லா தான் இருக்கு ;D
வில்லன், இவர இப்படியே கூப்பிடுவோம். இவர் இன்னும் ஒரு தேவை இல்லாத செலவு படத்துக்கு. இவர் சண்டை போட்டத விட, "நந்தா சூர்யா" மாதிரி தலையை சொளட்டி சொளட்டி பாக்குறது தான் அதிகம். அதையும் ஒழுங்கா செய்ய மாட்டுறார். இதுக்கு சூர்யாவையே போட்டு இருக்கலாம். வில்லன் போடுற சண்டையை விட பல மடங்கு பிரமாதமா நம்ம "மானாட மயிலாட" டீம் செய்வாங்க.
இசை ஓகே, பின்னணி இசை நல்லா இல்லை.
இயக்குனர், இவர் மேல எனக்கு எப்பவுமே மரியாதை கிடையாது. இந்த படத்துக்கு அப்புறமும் அதே நிலையில் தான் இருக்கார். கதை, திரைக்கதை மிக மிக சாதாரணம்.
சீனா - ஒரு நோய பரப்பி இந்தியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர
முயற்சிக்குது, அதுவும் ஒரே ஒரு மனிதனை இந்தியாவுக்கு அனுப்பி.
ஏன் இதையே, அமெரிக்காவுல செய்ய வேண்டியது தானே? எதுக்கு இந்தியா? எந்த ஒரு முகாந்திரமும் இல்லை.
சரி, அவ்வளவு கஷ்டப்பட்டு போதி தருமருக்கு மருந்து தெரிஞ்ச கிருமிய
கண்டுபிடிக்காம, போதி தருமருக்கு மருந்து தெரியாத ஒரு கிருமிய கண்டு
பிடிக்கிறது தானே?
அப்படியே ஒரு நோய் பரவினாலும், இந்தியா மாதிரி ஒரு நாடு, மூணு மாசத்துல முப்பது லட்சம் பேரையா பலி கொடுக்கும். தடுப்பு நடவடிக்கை செய்யாதா? WHO என்ன பண்ணும்? இந்தியாவுல நோய் வந்தா, உலகத்துல எல்லா நாட்டுக்கும் தானே இந்த நோய் வரும்? மருத்துவர்கள் விஞ்ஞானிகள் எல்லாம் புளியங்கா பறிச்சுகிட்டா இருப்பாங்க?
என்ன தான் ஹிப்னாடிசம்-னு சொன்னாலும், பார்த்த செகண்ட்-லையே ஒரு மனுஷன் வில்லனுக்கு அடிமையாகுறதும், அவர் கண்களை விட்டு அகன்ற பின்னும் அவரின் அடிமையாகவே செயல்படுவதும். இப்படி ஒரு மனுஷன் இருந்தா, ஒபாமா-வ அடிமையாக்குறது தானே? இந்திய பிரதமரையே சீனாவுக்கு வரச்சொல்லி, அவருக்கே ஊசி போட்டு அனுப்பி இருக்கலாம். தேவையில்லாம நாய்களை வேற கஷ்டப்படுத்திக்கிட்டு.
ஆமா, நாய்க்கு ஊசி போடுறதுக்கு எதுக்கு எக்ஸ்-ரே கண்ணாடி? அப்படி கிராபிக்ஸ்-க்காக செலவு பண்ணித்தான் ஆகணும்னா, கிருமிகள் நாய்க்குள்ள போற மாதிரியாவது காட்டி இருக்கலாம்.
வில்லனால, ஏனோ சூரியாவை மட்டும் ஹிப்னாடிசம் செய்து வசியம் பண்ண
முடியவில்லை. அது சூரியா DNA 80 சதவிகிதம் போதி தர்மரோட DNA வோட ஒத்து போரதாலையா? இல்ல சூர்யா ஹீரோ-ன்றதாலையா? ஒரு கூலிங் கிளாஸ் போட்டா வில்லன் கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு ஒரு கதை சொல்லிருக்கலாம், இதை விட நல்லா இருந்து இருக்கும்.
இந்த கதையோட ஆணிவேர் DNA. இதையே இவங்க ஒழுங்கா புரிஞ்சுகிட்டாங்கலான்னு தெரியல. ஜெனடிக் மெமரி- இதை வைத்து ஒரு மனிதனை போல இன்னொரு மனிதனை உருவாக்கலாம் ஆனால் இருவருக்கும் மூளை வேறு அதனால் நினைவுகளும்
வேறாகத்தான் இருக்க முடியும். அதாவது எலும்பில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு DNA வுக்கு, எப்படி நான் மூளையில் பதிய வைத்த அல்லது கற்றுக்கொண்ட விஷயங்கள் தெரிந்து இருக்க முடியும்?
அதுவும் போக முடியில், நகத்தில், எலும்பில், முதுகெலும்பில் என உடம்பின்
ஒவ்வொரு செல்லிலும் நிறைந்து இருக்கும் DNA வை மாற்றுவது? அதுவும்
வளர்ந்த ஒரு ஆணுக்கு? இதுக்கு அவனிடம் இருந்து ஒரு DNA வை எடுத்து அதை மாற்றி அதன் மூலம் போதி தர்மர் போன்ற ஒரு க்ளோன் உருவாக்கினோம்ன்னு சொல்லி இருக்கலாம்.
எனக்கும் DNA-பத்தி முழுசா தெரியாது. ஆனா இது முடியாதுன்னு மட்டும் தெரியும். இவங்க கொறஞ்ச பட்சம், கதை நடைபெறும் இடம் ஒரு பெரிய ஆய்வகம், 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்த, முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இடம்னு சொல்லி இருக்கலாம். அப்படி இருந்தால், பார்வையாளனுக்கு தெரியாத இடங்களையும் ஒரு த்ரில்லர் அனுபவத்தையும் கொடுத்து இருக்கலாம்.
இந்த கதைக்கு ஏன் "ஏழாம் அறிவு" னு பேர் வச்சாங்க? இல்லாத ஒன்னு-னு சொல்ல வாரங்களோ? இல்ல, நீ ஏழாம் அறிவ பயன்படுத்தி யோசிச்சா கூட இத புரிஞ்சுக்க முடியாதுன்னு சொல்லறாங்களா? எது எப்படியோ, நான் நினைச்சது நடந்துருச்சு.
உண்மையில், இந்த படைப்பு, தமிழனின் சிந்தனையில் தெளிவின்மையையே
காட்டுகிறது. இதில் கர்வப்பட ஏதும் இல்லை.

இதைச் சொன்னா புரொட்யூசர் என்னை நல்ல படம் எடுக்க விடமாட்றார்னுவாங்க... நமக்கேன் பொல்லாப்பு!
ReplyDelete